Monday 29th of April 2024 02:51:52 PM GMT

LANGUAGE - TAMIL
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 110,574 ஆக உயா்ந்தது!
இத்தாலியில் இன்றும் 727 பேரை  பலியெடுத்தது கொரோனா!

இத்தாலியில் இன்றும் 727 பேரை பலியெடுத்தது கொரோனா!


இத்தாலியில் கொரோனா வைரஸ் இன்றும் 727 உயிர்களைப் பலியெடுத்தது. இன்று பதிவான உயிரிழப்புக்களுடன் இத்தாலியில் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,155 ஆக அதிகரித்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்ததுள்ளது.

மார்ச் 26 முதல் தினசரி பதிவாகிவரும் உயிரிழப்புக்களில் இதுவே குறைந்த தொகையாகும்.

எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை நேற்று 105,972 ஆக பதிவான நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 110,574 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதன்கிழமை நிலவரப்படி இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16,847 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 4,035 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE